Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 ஓகஸ்ட் 09 , மு.ப. 06:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளிநொச்சி - பரந்தன் நகரப்பகுதியில் அமைந்துள்ள தனியார் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளை பெறுவதற்காக வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த உழவு இயந்திரம் களவாடப்பட்டுள்ளது.
குறித்த வாகனம் 7ஆம் திகதி மாலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், அன்றைய தினமே இரவு 8.30 மணியளவில் களவாடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பல பகுதிகளிலும் தேடிய போது உழவு இயந்திரம் கிடைக்கப்பெறவில்லை.
தொடர்ந்து, உழவு இயந்திர உரிமையாளர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (R)
1 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago