2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

எழில்ராஜன் அடிகளார் விசாரணைக்குப் பின்னர் விடுதலை

George   / 2017 மே 17 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.அகரன்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கான  ஏற்பாடுகளை செய்துவந்த மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை எழில்ராஜன் அடிகளாரை கைது செய்த முல்லைத்தீவு பொலிஸார், விசாரணைக்குப் பின்னர் அவரை விடுதலை செய்துள்ளனர்.

முல்லைத்தீவு பொலிஸ் தலைமையகத்தில் வைத்து, ஒன்றரை மணி நேரம் அவர் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அருட்தந்தை, நேற்று  இரவு 8 மணியளவில், முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்துக்கு பொலிஸாரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

முள்ளிவாய்க்கால் தேவாலயப்பகுதியில், இறுதி யுத்தத்தில் இறந்தவர்களின் நினைவாக, நினைவுக் கற்கள் பொறிக்கப்பட்டு வருகின்றன.

இதில் விடுதலைப் புலிகளின் பெயரும் இருப்பதாக தெரிவிக்கப்பட்ட தகவலையடுத்தே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. எனினும், அவர்  நேற்று தினம் இரவு 9.30 மணியளவில்  விடுவிக்கப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .