2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

எழுத்தூர் குளத்தை ஆழப்படுத்த நடவடிக்கை

Editorial   / 2019 ஓகஸ்ட் 18 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் நகர சபைக்குட்பட்ட எழுத்தூர் பகுதியில் காணப்படும் குளத்தை ஆழப்படுத்துவதற்கு மன்னார் நகர சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடும் வரட்சி காரணமாக, மாவட்டத்தில் உள்ள குளங்கள், நீர் நிலைகள் வற்றிய நிலையில் உள்ளன.

இந்த நிலையில், மன்னார் நகர சபைக்குட்பட்ட மக்களின் பயன்பாட்டில் காணப்பட்ட குறித்த குளமும் முழுமையாக வற்றியுள்ளது.

இந்த நிலையில், மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் அன்டனி டேவிட்சனின் பணிப்புரைக்கு அமைவாக, குறித்த குளம் அகலப்படுத்தப்பட்டும் ஆழப்படுத்தப்பட்டும் வருகின்றது.

இவ்வாறு ஆழப்படுத்தப்படும் போது, குறித்த குளத்தில் இருந்து பெற்றுக் கொள்ளப்படும் மண், மன்னார் நகர சபைக்குட்பட்ட சேதமடைந்த வீதிகளைப் புனரமைப்புப் பணிக்குப் பயன்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .