2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

ஏணை கட்ட முற்பட்ட தந்தை பலி

Niroshini   / 2020 நவம்பர் 23 , பி.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன் 

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட இருட்டுமடு பகுதியில், பிறந்த தனது குழந்தைக்கு, ஏணை கட்ட வீட்டில் ஏறிய குடும்பஸ்தர் ஒருவர் தவறி வீழ்ந்து உயிரழந்துள்ளார்.

இருட்டு மடு பகுதியைச் சேர்ந்த இராமசாமி மோகன்றாஜ் (வயது 36) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே, இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

21ஆம் திகதியன்று, தனது குழந்தைக்கு, ஏணை கட்ட வீட்டில் ஏறிய குறித்த நபர் தவறி விழுந்து படுகாயமடைந்த நிலையில், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்கைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

பின்னர் மீண்டும், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், நேற்று (22) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .