2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

ஏற்றுநீர்ப்பாசனம் வேண்டும்

George   / 2016 நவம்பர் 15 , மு.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு அம்பலப்பெருமாள்குளம் கிராமத்துக்கான ஏற்றுநீர்ப்பாசனத் திட்டமொன்றினை நடைமுறைப்படுத்துமாறு கிராம மக்கள், வடமாகாண விவசாய அமைச்சர், முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1968ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இக்கிராமத்தில், தற்போது 103 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்ற போதிலும், விவசாயத்தினையே உயிர்நாடியாக நம்பியுள்ள இக்கிராமத்தில் மேட்டுப்பயிர்ச் செய்கைக்கான நீர் நெருக்கடி காணப்படுகின்றது.

மீள்குடியேற்றத்தின் பின்னர் பல தரப்புகளுக்கும் ஏற்று நீர்ப்பாசனத் திட்டத்தினை செய்து தாருங்கள் என மனுக்கள் மூலமும் நேரடியாகவும் கோரிக்கை விடுத்த போதிலும் அவை இதுவரை நிறைவேற்றப்படவில்லை என கிராம மக்களினால் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .