2025 ஓகஸ்ட் 08, வெள்ளிக்கிழமை

ஏழு ஆண்டுகளாக முல்லை மக்கள் அவதி

Editorial   / 2017 ஜூன் 18 , பி.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்  

முல்லைத்தீவில், கடந்த ஏழு ஆண்டுகளாக, நிரந்தர பஸ் நிலையம் அமைக்கப்படவில்லை. மேலும், நகரத்தில் முக்கிய இடங்களில் நிழற்குடைகள் இல்லாததன் காரணமாக, வீதிகளில் நீண்ட நேரம் பஸ்களுக்காக பயணிகள் காத்திருக்கின்ற அவலம் தொடர்வதாக, அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.  

முல்லைத்தீவு நகரத்துக்கென, நிரந்தர பஸ் நிலையத்துக்கான எந்தவிதமான வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்படவில்லை. மாவட்டத்துக்குள்ளேயும் வெளியேயும், பஸ்கள் பணியில் ஈடுபடுகின்ற போது, பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் உருவாக்கப்படவில்லை.   

நீண்ட நேரம் கால் கடுக்க காத்திருந்தே, பஸ்களில் பயணிக்க வேண்டியுள்ளது. மழை, வெயில் நேரங்களில் பயணிகள் நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர். மலசல கூட வசதிகள், குடிநீர் வசதிகள் சிறந்த முறையில் உருவாக்கப்படவில்லை.  

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், மாவட்டத்தின் முக்கிய பிரச்சினையான இப்பிரச்சினை குறித்து ஆராயப்பட்டபோதிலும், இதுவரை தீர்வுகள் காணப்படவில்லை. தொடர்ந்து அடிப்படை வசதிகளற்ற நிலையில், முல்லைத்தீவு நகரத்தில் பயணிகள் நெருக்கடிகளை எதிர்கொண்டுவருவதாக, விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .