Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Niroshini / 2021 செப்டெம்பர் 22 , பி.ப. 02:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன், செ.கீதாஞ்சன்
தொடர்ச்சியாக ஐ.நாவில் கொண்டுவரப்படும் தீர்மானம் என்பது, இலங்கையை அடிபணியவைப்பதும் அச்சுறுத்துவதுமாக இருந்தே அன்றி, தமக்கான நல்ல தீர்வாக அமையவில்லை என்று, ஜனநாயக போராளிகள் கட்சியின் பொதுச் செயலாளர் இ.கதிர் தெரிவித்தார்.
முல்லைத்தீவில், நேற்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், இம்முறையும் மக்கள் மிகுந்த ஏமாற்றத்தினை சந்தித்துள்ளார்கள் என்றார்.
இலங்கை தமிழர்கள் தனித்துவமான இனம். வரலாற்று ரீதியாக வடக்கு - கிழக்கு தாயகப் பகுதியில் வாழ்ந்து வந்தார்கள் என்ற அங்கிராம் இன்று வரைக்கும் உலக நாடுகளால் தமிழ் மக்களுக்கு வழங்கப்படவில்லை எனவும், அவர் கூறினார்.
மாறாக, இலங்கையை சர்வதேசத்தின் நிகழ்ச்சி நிரலுக்குள் கொண்டு சென்று, அதன் ஊடாக தங்கள் பூகோள ரீதியான அரசியலை நகர்த்துவதற்காக, தமிழ் மக்களின் பிரச்சினையை சர்வதேசம் கையாண்டு வருகின்ற தோற்றப்பாடே, காணக்கூடியதாக இருக்கின்றது எனவும், அவர் தெரிவித்தார்.
'தொடர்ச்சியாக ஐ.நாவின் அமர்வு வரும் போது தமிழ்தேசியம் சார்ந்த அரசியல்வாதிகள் தங்களின் கட்சி கொள்கைகளையும் அரசியலையும் அந்தக் காலங்களில் முன்னெடுத்துச் செல்கின்றாறர்களே தவிர, மக்கள் தொடர்பில் மக்களின் நிரந்தர தீர்வு இழைக்கப்பட்ட அநீதிகள், நீதி விசாரணை, போரின் பின்னர் சரணடைந்த கைதிகள், காணாமல் ஆக்கப்பட்டோர், போராளிகளின் மறுவாழ்வு, நீதி விசாரணைகள் தொடர்பில் எந்த முன்னேற்றத்தினையும் செய்யவில்லை. அதற்கு இந்த அரசாங்கத்துக்கு சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்க முன்வரவில்லை
'போரில் சம்பந்தப்படாதவர்களுடன் விடுதலைப் போராட்டத்தின் எந்தத் தொடர்பும் இல்லாதவர்களுடன் மனித உரிமைகள் மக்களின் உரிமைகள் போராளிகளின் நிலைப்பாடு தொடர்பாக தொடர்ச்சியாக பேசுவதில் எந்தப் பயனும் இல்லை.
எதிர்காலத்தில் இவ்வாறான செயற்பாடுகளை நிறுத்திவிட்டு, சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் தொடர்ச்சியாக பேச்சுவார்தைகளை நடத்தி, உண்மைகளை கண்டறிந்து நீதிக்கான பொறிமுறையினை உருவாக்குவதுதான் பொருத்தமானதாக இருக்கும்' எனவும், கதிர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago