Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2020 ஜனவரி 27 , பி.ப. 03:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியில், வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள ஒருங்கிணைந்த சாலை (ஐரோட்) திட்டத்தின் கீழ், வவுனியா மாவட்டத்தில் 271.48 கிலோமீற்றர் வீதிகள் காப்பற் வீதிகளாக புனரமைக்கப்பவுள்ளன.
அந்தவகையில், குறித்த வீதிகளின் புனர்நிர்மாணத்துக்காக, 12,947.6 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் நிர்மாணப் பணிகள், ஜனவரி 21ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில் வவுனியாவில் - பறையனாலங்குளம் - வீதி, வவுனியா - நேரியகுளம் வீதி, பூவரசங்குளம் - துணுக்காய் வீதி, பூவரசங்குளம் -செட்டிகுளம் வீதி, உலுக்குளம் - வாரிகுட்டீயூர் வீதி, மணியர்குளம் - பிரப்பன்மடு வீதி, நெடுங்கேணி - கூழாங்குளம் வீதி, பூந்தோட்டம் - சாந்தசோலை வீதி, பிராமணாலங்குளம் - பரப்புகடந்தான் வீதி, கல்நாட்டியகுளம் - ஆசிகுளம் வீதி, நைனாமடு - சமளங்குளம் வீதி, புதூர் வீதி, ஓமந்தை - இளமருதங்குளம் வீதி, சேமமடு வீதிகள் என்பன குறித்த திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஐரோட் திட்டத்தின் கீழ் வடக்கில் 1034.18 கிலோமீற்றர் நீளமான 343 வீதிகள் புணரமைக்கபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
2 hours ago
3 hours ago