2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

ஒட்டறுத்தகுளத்தில் வயல் விழா

Editorial   / 2019 பெப்ரவரி 06 , பி.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 -சண்முகம் தவசீலன் 

முல்லைத்தீவு - கொல்லவிலாங்குளம் விவசாய போதனாசிரியர் பிரிவில், கிருமி நாசினிகள் பயன்படுத்தாது நாற்று நடுகை மூலம் இயந்திரம் மூலம் நாற்று நடப்பட்டு செய்கை பண்ணப்பட்ட வயல் நிலத்தில், இன்று வயல் விழா  நடைபெற்றது.

கொல்லவிலாங்குளம் விவசாய போதனாசிரியர் கி கீர்த்திகன் தலைமையில் நடைபெற்ற இந்த வயல் விழாவில், மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் செல்வி ந. றஞ்சனா, முல்லைத்தீவு பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் உகநாதன், முல்லைத்தீவு விவசாய திணைக்கள உதவிப் பணிப்பாளர், மாந்தை கிழக்கு பிரதேச சபை செயலாளர், விவசாய போதனாசிரியர்கள், விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள், விவசாயிகள் என பலரும் கலந்துகொண்டனர் 

நிகழ்வில், கிருமி நாசினிகள் பயன்படுத்தாது நாற்று நடுகை மூலமும் இயந்திரம் மூலமும் நாற்று நடப்பட்டு செய்கை பண்ணப்படும் பொழுது கிடைக்கும் நன்மைகள் தொடர்பாக விவசாயிகளுக்கு  தெளிவுபடுத்தப்பட்டது.

அத்துடன்,  படைபபுழுவின் தாக்கம் தொடர்பிலும் விவசாயிகளுக்கு தெளிவூட்டப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .