2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

’ஒன்றுகூடலுக்கு செலுத்த பணம் இல்லை’

Editorial   / 2019 டிசெம்பர் 26 , பி.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி கமநல சேவை நிலையத்தில் இவ்வாண்டின் இறுதியில் நடைபெறவுள்ள ஒன்றுகூடலுக்காக பணம் செலுத்த முடியாத நிலையில் பல கமக்கார அமைப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வழமையாக கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கமநல சேவை நிலையங்களே ஒன்றிணைந்து குறித்த நிகழ்வை நடாத்தி வரும் நிலையில், இவ்வாண்டு கிளிநொச்சி கமநல சேவை நிலையத்தில் தனியான ஒன்று கூடலுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், கிளிநொச்சி கமநல சேவை நிலையத்தின் கீழுள்ள இருபத்து நான்கு கமக்கார அமைப்புகளிடமிருந்து 5,000 ரூபாய் வீதம் பணம் பெறப்பட்டு குறித்த ஒன்று கூடல் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதில் பத்து வரையான கமக்கார அமைப்புகள் பணம் செலுத்திய போதிலும் ஏனைய கமக்கார அமைப்புகளினால் பணம் செலுத்த முடியாமல் இருப்பதாக கமநல சேவை நிலையத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

காரணம் கமக்கார அமைப்புகளிடம் பணம் இல்லாமையே ஆகும். எதிர்காலத்தில் இவ்வாறான ஒன்று கூடல்களுக்கு நிதியினை கமக்கார அமைப்புகளிடம் கோராமல் வேறு வழிகளில் திரட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் பல கமக்கார அமைப்புகள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X