2026 மே 02, சனிக்கிழமை

ஒரு மாதத்தில் 4,722 வெடிபொருள்கள் அகற்றப்பட்டுள்ளன

Editorial   / 2018 நவம்பர் 01 , பி.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

வடக்கின் மூன்று மாவட்டங்களில், கடந்த ஒரு மாத காலத்தில், 4 ஆயிரத்து 722 வெடிபொருள்கள், தமது நிறுவனத்தால் அகற்றப்பட்டுள்ளனவென, ஹலோ ட்ரஸ்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இலங்கையில், கடந்த 16 வருட காலமாக, வெடிபொருள்களை அகற்றும் பணியில், குறித்த நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது.

தற்போது, வடக்கின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிள், வெடிபொருள்களை அகற்றும் பணியில் குறித்த நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் இருந்து, கடந்த ஒரு மாதத்தில், மிதிவெடிகள் - 1,498, வாகன எதிர்ப்பு மிதிவெடி - வெடிக்காத வெடிபொருள்கள் - 01,209, ஆபத்து குறைந்த வெடிபொருள்கள் - 14, துப்பாக்கி ரவைகள் - 3,000 என்பவற்றை மீட்டதாக, அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன், இவ்வாறான வெடிபொருள்களை அகற்றுவதற்காக, மனித வலுவையும் இயந்திர வலுவையும் பயன்படுத்துவதாக, ஹலோ ட்ரஸ்ட் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .