2025 டிசெம்பர் 25, வியாழக்கிழமை

ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் பலி: வவுனியாவில் சோகம்

Editorial   / 2023 மார்ச் 07 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.அகரன்

வவுனியா குட்செட்வீதி,உள்ளகவீதியில் அமைந்துள்ள வீடொன்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்குபேரின் சடலங்கள் பொலிஸாரால் இன்று (07) மீட்கப்பட்டமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

குறித்த வீட்டின் உரிமையாளருக்கு அவரது நண்பர் ஒருவர் தொலைபேசி அழைப்பினை ஏற்ப்படுத்தியுள்ளார். எனினும் அவர் பதிலளிக்கவில்லை. இதனையடுத்து அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.  இதன்போது குறித்த வீட்டினுள் குடும்பஸ்தர் அவரது சிறுவயதான இருபிள்ளைகள், மனைவி ஆகியோர் மர்மமான முறையில் மரணமடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். 

சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த சம்பவத்தில் அதேபகுதியை சேர்ந்த சிவபாதசுந்தரம் கௌசிகன் வயது42,  வீட்டின் விறாந்தை பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதுடன், அவரது மனைவியான கௌ.வரதராயினி வயது36, இரு பிள்ளைகளான கௌ. மைத்ரா (வயது9)  கௌ.கேசரா (வயது3) ஆகியோர் உறங்கியபடியும் சடலங்களாக மீட்கப்பட்டனர்.  

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவரும் வவுனியா பொலிஸார் மீட்கப்பட்ட சடலங்களை சட்டவைத்திய பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றனர். குறித்த சம்பவம் வவுனியாவில் பல்வேறு அதிர்வலைகளை ஏற்ப்படுத்தியுள்ளது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X