2025 மே 19, திங்கட்கிழமை

’ஒழுங்கு வரிசையில் உரத்தை வழங்குகிறோம்’

Editorial   / 2019 டிசெம்பர் 01 , பி.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

அந்தந்த கமக்கார அமைப்புகள் வழங்கிய பெயர் விவரப் பட்டியலுக்கு அமைவான ஒழுங்கு வரிசையிலேயே, விவசாயிகளுக்கான மானிய உரம் வழங்கப்பட்டு வருவதாக, ஒட்டுசுட்டான் பிரதேச விவசாய உத்தியோகத்தர் தெரிவித்தார்.

இது குறித்து தொடர்ந்துரைத்த அவர், ஒட்டுசுட்டான் பிரதேசத்தில், இம்முறை 10 ஆயிரத்தி 400 ஏக்கரில் பெரும்போக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஒட்டுசுட்டானில் உள்ள 33 கமக்கார அமைப்புக்களில் 3,500 வரையான விவசாயிகள் காணப்படுவதாகத் தெரிவித்த அவர், அந்தந்த கமக்கார அமைப்புகள் கொடுத்த பெயர் விவரப் பட்டியலுக்கு அமைவான ஒழுங்கு வரிசையிலேயே, ஒக்டோபர் 28ஆம் திகதியில் இருந்து மானிய உரம் வழங்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X