Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 29 , பி.ப. 04:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியா - ஓமந்தையில் அமைந்துள்ள அரச உத்தியோகத்தர் குடியிருப்புப் பகுதியில் குடியிருக்காத மக்களின் காணிளைச் சுவீகரித்து, காணியற்றவர்களுக்கு வழங்குமாறு கோரி, அக்குடியிருப்பு மக்களால், குறித்த குடியிருப்பு பகுதிக்கு முன்பாக உள்ள வீதியில், நேற்று (28) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், 8 வருடங்களுக்கு முன்னர், வவுனியா மாவட்டத்தில் கடமையாற்றும் அரச உத்தியோகத்தர்களில் காணியற்ற 800க்கும் அதிகமானோருக்கு ஓமந்தை பகுதியில் காணிகள் வழங்கப்பட்டு, குடியேற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாகவும் இந்நிலையில், தற்போது வரையில் அக்குடியிருப்பு பகுதியில் 87 குடும்பங்களே வசித்து வருவதாகவும் கூறினர்.
ஏனைய பகுதிகள் பற்றைக்காடுகளாகவும் மக்கள் நடமாட்டமற்ற பகுதியாகவும் காணப்படுவதால், அங்கு வசிக்கும் மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலான நிலை காணப்படுவதாகத் தெரிவித்த அப்பகுதி மக்கள், குறித்த குடியிருப்புப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு காணிகளுக்கான அனுமதிப்பத்திரங்களும் வழங்கப்படவில்லையெனவும் குற்றஞ்சாட்டினர்.
எனவே தமது காணிகளுக்கான உறுதிப் பத்திரங்களை வழங்க வேண்டுமெனவும் குடியிருக்காதவர்களின் காணிகளைச் சுவீகரித்து, காணியற்றவர்களுக்கு வழங்க வேண்டுமெனவும், அவர்கள் வலியுறுத்தினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
6 hours ago