2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

ஓமந்தையில் மின்னல் தாக்கி 11 மாடுகள் பலி

Editorial   / 2022 ஒக்டோபர் 13 , பி.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன் 

வவுனியா, ஓமந்தைப் பகுதியில் மின்னல் தாக்கத்தின் காரணமாக 11 மாடுகள் பலியாகியுள்ளன.

நேற்று (12) மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிநவருவதாவது,

வவுனியா, ஓமந்தை, அரச முறிப்பு பகுதியில் மாலை நேரம் மாடுகள் மேய்ச்சலில் ஈடுபடுக்கொண்டிருந்த போது மழை பெய்த்துள்ளது.

இதன்போது,  மாடுகள் மோய்சலில் ஈடுபட்ட பகுதியில் உள்ள மரத்தின் மீது இடி மின்னல் தாக்கம் ஏற்பட்டு மாடுகளை தாக்கியமையால் 11 மாடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளன.

இதேவேளை, வவுனியாவில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் கடந்த 7 ஆம் திகதி இடி, மின்னல் தாக்கத்தினால் மாமடு பகுதியில் குடும்ப பெண்ணொருவர் மரணமடைந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X