2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

கௌதாரிமுனை கிராமத்தின் வயல்நிலங்கள் உவரடைவதாக முறைப்பாடு

George   / 2016 செப்டெம்பர் 02 , மு.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி, பூநகரி, கௌதாரிமுனை கிராமத்துக்குள் கடல்நீர் உட்புகுவதால், 300 ஏக்கர் வரையான வயல்நிலம், உவர் நிலமாக மாறி வருவதாக கௌதாரிமுனை கமக்காரர் அமைப்பு, வடமாகாண விவசாய அமைச்சர், கிளிநொச்சி மாவட்டச் செயலாளர், பூநகரிப் பிரதேச செயலாளர், நீர்ப்பாசனப் பணிப்பாளர் மற்றும் கமநலசேவைகள் உதவி ஆணையாளர் ஆகியோரிடம், மனுமூலம் முறைப்பாடு செய்துள்ளது.  

'1990ஆம் ஆண்டுக்கு முன்னர், இப்பகுதியில் உவர்த் தடுப்பணைகள் இருந்ததாகவும் அதன் பின்னர் ஏற்பட்ட போர் காரணமாக, இத்தடுப்பணைகள் அழிவடைந்ததன் காரணமாக கௌதாரிமுனையின் வடக்குப் பக்கமாக கடல்நீர் உட்புகத் தொடங்கியுள்ளது.

விரைவாக அணைகள் அமைக்கப்படாமல் விட்டால், 300 ஏக்கர் வயல் நிலமும் உவர் நிலமாக முழுமையாக மாறிவிடும். வயல் நிலம் இல்லாமல் ஆகும் நிலையேற்பட்டால், கௌதாரிமுனை மக்கள் இடம்பெயர வேண்டிய அவலம் ஏற்படும்' என, கமக்காரர் அமைப்பினால் கையளிக்கப்பட்டுள்ள அம்மனுவில், மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .