2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

குருகுல பிதா அப்புஜீ அவர்களின் நூற்றாண்டு விழா கிளிநொச்சியில்

Gavitha   / 2016 ஒக்டோபர் 20 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

குருகுல பிதா என எல்லோராலும் அழைக்கப்படும் அப்புஐீஅவர்களின் நூறாவது ஜனனதின நிகழ்வும், உருவச்சிலை திறப்பும் "நினைவழியாப் பெருமனிதன்" என்னும் நூல் வெளியீட்டுவிழாவும் கிளிநொச்சியில் நாளை  வௌ்ளிக்கிழமை (21) 10.00 மணிக்கு கிளிநொச்சி இந்துக்கல்லூரி மண்டபத்தில் உதவி திட்டமிடல் பணிப்பாளர் அ.கேதீஸ்வரன்  தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்த நூல்  வெளியீட்டு விழாவில், தவத்திரு மகாதேவ சுவாமிகள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் திரு சிவபூமி தலைவர் ஆறுதிருமுகன்  மாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை மகாதேவ சைவச்சிறுவர் இல்லத்தலைவர் இராசநாயகம் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் றுபவதி கேதீஸ்வரன்,  கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சத்தியசீலன் வலயக்கல்விப்பணிப்பாளர் க. முருகவேல்  ஆசிரியர் பயிற்சி கலாசாலை பிரதி அதிபர்  திரு ச.லலீசன்  ஆகியோர் கலந்து கொண்டு உரை நிகழ்த்தவுள்ளனர்.

இதே வேளை இதுவரை காலமும் குருகுலத்தில் இருந்து கல்வி பயின்ற பழைய மாணவர்களின் விபரங்களை சேகரிக்கவுள்ளதால்  குருகுலத்தில் இருந்து கல்வி பயின்ற பழைய மாணவர்கள் இதில் குறிப்பிடபட்டுள்ள அலைபேசி ஊடாகவே அல்லது மின்னஞ்சல் முகவரி ஊடாகவே  தொடர்பினை ஏற்படுத்துமாறும் விழா ஏற்பாட்டு குழுவினர் கேட்டுக்கொள்கின்றார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .