Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Princiya Dixci / 2016 ஜூலை 23 , மு.ப. 10:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அரிப்பு அல்லிராணிக்கோட்டையை அண்மித்த கடற்கரைப் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் சுமார் 1 கோடி 39 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாப்பொதிகளை, இன்று சனிக்கிழமை (23) காலை மீட்டுள்ளதாக மன்னார் மாவட்ட போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் உதய குமாரசிங்கம் கௌசிகன் தெரிவித்தார்.
அரிப்பு அல்லிராணிக்கோட்டையை அண்மித்த கடற்கரைப்பகுதியை பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது 5 மூட்டைகளில் பொதி செய்யப்பட்ட கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டன.
139 கிலோ 500 கிராம் எடை கொண்ட குறித்த கஞ்சாப்பொதியின் பெறுமதி சுமார் 1 கோடி 39 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் எனத் தெரிய வந்துள்ளது.
மன்னார் மாவட்ட போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் சியந்த பீரிஸின் ஆலோசனைக்கு அமைவாகவும், மன்னார் பொலிஸ் நிலையத்தின் தலைமையக பொறுப்பதிகாரி அஜந்த றொற்றிகோவின் வழி நடத்தலில் கீழ் மன்னார் மாவட்ட போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் உதய குமாரசிங்கம் கௌசிகன் தலைமையில் சென்ற பொலிஸ் பிரிவினரே சிலாபத்துறை கடற்படை கட்டளைத்தளபதி ஜீ.யாசிங்கவின் உதவியுடன் குறித்த கேரளா கஞ்சாப்பொதிகளை மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட கேரள கஞ்சாப்பொதிகள், தற்போது மன்னார் பொலிஸ் நிலையத்தின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளன.
குறித்த கஞ்சாப்பொதிகள், இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட நிலையில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது. சந்தேகநபர்கள் எவரும் இதுரைக் கைதுசெய்யப்படவில்லை.
மேலதிக விசாரனைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக மன்னார் மாவட்ட போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் உதய குமாரசிங்கம் கௌசிகன் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
30 minute ago
3 hours ago
5 hours ago