Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
George / 2016 நவம்பர் 03 , மு.ப. 12:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஜே.ஏ.ஜோர்ஜ்
கிளிநொச்சி மாவட்டத்தில், நவீன வசதிகளுடன் கூடிய தீயணைக்கும் பிரிவொன்றை, 97 மில்லியன் ரூபாய் செலவில் ஸ்தாபிப்பதற்கு, அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
கிளிநொச்சி பொது வர்த்தகச் சந்தைத் தொகுதியில் ஏற்பட்ட தீ தொடர்பிலான அனர்த்த மதிப்பீட்டை மேற்கொண்ட குழுவின் சிபாரிசுக்கமையவே, இந்த யோசனை முன்வைக்கப்பட்டது. அதற்கிணங்க, அதற்கு அமைச்சரவை அங்கிகாரம் கிடைத்ததென்று, அமைச்சரவையின் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்தச் செய்தியாளர் மாநாடு, கொழும்பிலுள்ள அரசாங்கத் தகவல் திணைக்களத்தில், நேற்றுப் புதன்கிழமை (02) இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் கூறியதாவது,
“தீயினால் பாதிப்புக்கு உள்ளான கிளிநொச்சி பொது வர்த்தகச் சந்தைத் தொகுதியின் 122 கடைகளின் வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்ட வியாபாரிகளுக்கு, 74 மில்லியன் ரூபாய் நட்ட ஈட்டுத் தொகையினை பெற்றுக்கொடுப்பதற்கும், அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியது.
மேலும், தீயினால் பாதிப்புக்கு உள்ளான கடைத்தொகுதியினை மீள நிர்மாணிப்பதற்கு, 150 மில்லியன் மதிப்பீட்டு செலவில், நிலையான பொதுச் சந்தைத் தொகுதியொன்றை நிர்மாணிப்பதற்கும், அமைச்சரவை அனுமதி வழங்கியது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய விவகார அமைச்சர்
டி.எம்.சுவாமிநாதன் ஆகியோரால், இணைந்து முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கே, அமைச்சரவை அங்கிகாரம் கிடைத்துள்ளது” என, அமைச்சர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
9 hours ago
9 hours ago