2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

கிளிநொச்சியில் உணவுக் களஞ்சியம் அமைக்க நடவடிக்கை

Sudharshini   / 2016 மே 24 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தில் நிதியமைச்சின் 50 மில்லியன் ரூபாய் நிதிச் செலவில் உணவுக் களஞ்சியம் ஒன்றை அமைக்கப்படவுள்ளதாக கிளிநொச்சி மாவட்டச் செயலர் சுந்தரம் அருமைநாயகம் செவ்வாய்க்கிழமை (24) தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டம் ஒரு விவசாய மாவட்டமாக காணப்படுகின்றது. மாவட்ட விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படுகின்ற நெல்லைக் களஞ்சியப்படுத்த போதிய வசதிகள் இல்லாமையால், விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்வது பிரச்சினையாகவுள்ளது.

இதனை கவனத்தில் எடுத்த நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, தனது அமைச்சின் ஊடாக நிதி ஒதுக்கியுள்ளார். இதன் மூலம் மாவட்டத்தின் உணவுப் பொருட்களை களஞ்சியப்படுத்தி வைக்கக்கூடிய வகையில் களஞ்சியம் ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

நிதி அமைச்சின் ஊடாக கிளிநொச்சி மாவட்டம் உள்ளிட்ட நாட்டிலுள்ள 3 மாவட்டங்களில் தலா 50 மில்லியன் ரூபாய் செலவில் இவ்வாறு உணவுக் களஞ்சியம் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X