2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

கிளிநொச்சியில் 3,848 குடும்பங்கள் போஷாக்குக் குறைவால் பாதிப்பு

Menaka Mookandi   / 2016 செப்டெம்பர் 15 , மு.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தில் போஷாக்குமட்டம் குறைந்த நிலையில் 3 ஆயிரத்து 848 குடும்பங்கள் உள்ளதாக மாவட்ட மேலதிகச் செயலர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்தார்.

சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையும்; மாவட்டச் செயலகமும் மேற்கொண்ட ஆய்வுகளின்போது, போஷாக்குக் குறைவால் பாதிக்கப்பட்ட இக்குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டன.

இக்குடும்பங்களின் போஷாக்குமட்டத்தை உயர்த்துவதற்கான பல்வேறு செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குழந்தைகளின் போஷாக்குமட்டத்தை உயர்த்தும் வகையில் முன்பள்ளிகளூடாக பால் உள்ளிட்ட போஷாக்கு உணவுகள் வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

கிளிநொச்சி மீள்குடியேற்ற மாவட்டமாக காணப்படுகின்றமையால், இங்கு பல்வேறு தேவைகள் காணப்படுகின்றன. இங்கு போஷாக்குக் குறைபாடு காணப்படுகின்றமை கடந்த காலத்தில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .