Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Niroshini / 2016 நவம்பர் 22 , பி.ப. 02:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.என்.நிபோஜன்
கிளிநொச்சியில் விட்டுவிட்டு பெய்து வரும் கடும் மழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
தொடர்ச்சியாக கடந்த மூன்று தினங்கள் பெய்து வரும் மழையினால், தாழ் நிலப்பகுதிகள் வெள்ளத்தினால் மூழகியுள்ளன. பலரது வீடுகளுக்கும் வெள்ளம் புகுந்துள்ளது. அதேவேளை, இதுவரை நிரந்தர வீட்டுத்திட்டங்கள் கிடைக்காது தற்காலிக வீடுகளில் வசிக்கும் மக்கள் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
குறிப்பாக கிளிநொச்சியில் உருத்திரபுரம், பொன்னகர், இரத்தினபுரம், பரந்தன் சிவபுரம், பண்ணங்கண்டி, மலையபளபுரத்தின் ஒரு பகுதி என பல பிரதேசங்கள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளன.
பல வீதிகளில் வெள்ளம் ஊடறுத்து பாய்கிறது. இதனால் சில மணிநேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டிருந்தது.
மேலும், இதுவரை வெள்ளத்தினால் இடம்பெயரும் நிலைமை மக்களுக்கு ஏற்படவில்லை. இருந்தும் தற்போது பெய்கின்ற மழை தொடர்ந்தும் பெய்து வருமனால் வெள்ளப்பாதிப்பு மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும்,கனகாம்பிகைக் குளத்தின் நீர்மட்டம் பத்தடி ஒன்பது அங்குலமாக அதிகரித்தமையினால் கனகாம்பிகைக்குளம் வான் பாய்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
2 hours ago