Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
George / 2016 நவம்பர் 12 , மு.ப. 08:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.என்.நிபோஜன்
யாழ். பல்கலைகழக மாணவர்களின் கொலையை கண்டித்து கடந்த மாதம் 25ஆம் திகதி வடக்கில் மேற்கொள்ளப்பட்ட ஒரு நாள் கதவடைப்பு போராட்டத்தின் போது, கிளிநொச்சியில் அமைதியின்மையை தோற்றுவித்தவர்கள,; தற்போது கைது செய்யப்பட்டு வருகின்றார்கள்.
இதுவரை மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏனையவர்களையும் கைது செய்யும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் தெரிவிக்கப்படுகிறது. ஊடகங்களில் வெளியான புகைப்படங்களை ஆதரமாக கொண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்படுவதாக கூறப்படுகின்றது.
குறித்த கதவடைப்பு நாளன்று ஏ9 வீதி மற்றும் கிளிநொச்சி புறநகர் பகுதிகளிலும், சந்திகளிலும் டயர்களை கொழுதியவர்கள் மற்றும் கலகம் விளைவித்தவர்கள் என்பவர்களே கைது செய்யப்படுகின்றனர்.
இதேவேளை, குறித்த தினத்தன்று கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு முன்பாக கலகத்தில் ஈடுப்பட்டு, பொலிஸாரை தாக்கிய நபர், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு தற்போது பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அத்தோடு மேலும் பலர் தேடப்பட்டும் வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
9 hours ago
9 hours ago