2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

கிளி. விவசாயிகளுக்கு ரூ.32 மில்லியன் இழப்பு

Princiya Dixci   / 2016 மே 24 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த வாரம் பெய்த மழையால், ஏற்பட்ட வெள்ளத்தால் பயிர் அழிவு ஏற்பட்டு 32 மில்லியன் ரூபாய் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்டச் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன

கிளிநொச்சி மாவட்டத்தில் பெய்த 373 மில்லிமீற்றர் மழையால் மாவட்டத்தில் பெரு வெள்ளம் ஏற்பட்டதுடன், குளங்களும் வான் பாய்ந்தன. வாள் வெள்ளம் வயல் நிலங்களுக்குள் உட்புகுந்தமையால் பயிர்ச் செய்கைகள் அழிவடைந்தன.

இதில் குறிப்பாக அக்கராயன்குளம், வன்னேரிக்குளம், இரணைமடுக்குளத்தின் கீழ் அறுவடைக்குத் தயாராகவிருந்த உபதானியப் பயிர்ச் செய்கைகள் பேரழிவைக் கண்டன. மேலும் நெற் பயிர்களும் அழிவடைந்தன.

இதனால் விவசாயிகளுக்கு 32 மில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X