2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

கைவினைப் பொருள் கண்காட்சி

George   / 2016 செப்டெம்பர் 30 , மு.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.தபேந்திரன்

வட மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாணக் கண்காட்சி கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவு கலாசார மண்டபத்தில் நாளை சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

திணைக்களத்தின் பணிப்பாளர் ஜே.ஜே.பெலிசியன் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் முதன்மை விருந்தினராக வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் கலந்து கொண்டு மகளிர் அபிவிருத்தி நிலையங்களின் பெண்களால் செய்யப்பட்ட கைவினைப் பொருட்கள், தைத்த ஆடைகள், உணவுப் பொருட்கள், மணப்பெண் அலங்காரம், ஐசிங் கேக் ஆகியன காட்சிப்படுத்தப்படவுள்ளதுடன், விற்பனையும் இடம்பெறவுள்ளன.

கண்காட்சி முதலாம் திகதி பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரையும், இரண்டாம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரையும் நடைபெறவுள்ளது.

சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண கிராம அபிவிருத்தி, மீன்பிடி, போக்குவரத்து, வர்த்தக வாணிபம், வீதி அபிவிருத்தி மற்றும் மோட்டார் போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

கௌரவ விருந்தினர்களாக வடமாகாண பிரதம செயலாளர் அ.பத்திநாதன், கிராம அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சி.சத்தியசீலன், கிளிநொச்சி மாவட்ட செயலர் சு.அருமைநாயகம் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .