2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

கசிப்பு காய்ச்சிய இருவர் பொதுமக்களால் மடக்கி பிடிப்பு

Editorial   / 2023 ஜனவரி 08 , பி.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

  நடராசா கிருஸ்ணகுமார்
 

பூநகரி, முக்கொம்பனில் கசிப்பு காய்ச்சிய இருவர் பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு, கசிப்பு,  உபகரணங்களும் கைப்பற்றப்பட்டன.  இச்சம்பவம் சனிக்கிழமை (07) இடம்பெற்றுள்ளது.

கசிப்பு காய்ச்சப்படுவதாக பொது மக்களுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய, ஒன்று திரண்ட மக்கள் கசிப்பு காய்ச்சிய இருவரை மடக்கி பிடித்ததுடன் பூநகரி பொலிஸாருக்கும் தகவல் வழங்கினர். பொலிஸார் வருவதற்கு தாமதம் ஏற்பட்ட நிலையில், கசிப்பு காய்ச்சிய இருவரும் தப்பிச் சென்று விட்டனர்.

முக்கொம்பனுக்கு வந்த பொலிஸாரிடம் கசிப்பு, உபகரணங்கள் எனபன  பொது மக்களால் கையளிக்கப்பட்டன.  10 நாள்களுக்கு முன்னர், முக்கொம்பன் கிராமத்தில் போதைப்பொருட்களை கட்டுப்படுத்துமாறு ஆர்ப்பாட்டம் நடாதிய நிலையில், கசிப்பு உற்பத்தியில் ஈடுபடுபவர்களை தடுக்கும் செயற்பாடுகளிலும் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .