Freelancer / 2023 ஜனவரி 17 , மு.ப. 03:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவு கரைதுறைபற்று தண்ணிமுறிப்பு ஆறுமுகத்தான் குளம் கிராமத்தில் கசிப்பு உற்பத்தியை முற்றாக ஒழிக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
117 வரையான குடும்பங்கள் வாழ்கின்ற இக்கிராமத்தில் கசிப்பினால், குடும்ப வன்முறைகள் அதிகரித்துள்ளன. கசிப்பு உற்பத்தியில் ஈடுபடுபவர்கள் தொடர்பாக பொது மக்கள், பொலிஸாருக்கு தகவல் கொடுத்தாலும், தகவல் வழங்குவோரின் விபரங்கள் கசிந்து
விடுவதால், தகவல்களை வழங்குவதற்கும் பொதுமக்கள் அஞ்சுகின்றனர்.
இந்நிலையில், சட்டவிரோத மதுவினால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக, கிராம மட்டத்தில் பிரதேச செயலக அதிகாரிகள் விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்த வேண்டுமென்றும் கோரியுள்ளனர்.
கசிப்பினால் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் பாதிக்கப்படுவதுடன் குடும்ப வன்முறைகள் சமூக வன்முறைகளாக அதிகரித்து செல்வதாகவும் பொதுமக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். R
29 minute ago
41 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
41 minute ago
48 minute ago