2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

கச்சதீவு வருடாந்தத் திருவிழா; 6ஆதி திகதி பஸ், படகு சேவைகள் ஆரம்பம்

Editorial   / 2020 பெப்ரவரி 23 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.குகன்

கச்சதீவு புனித அந்தோனியார்  தேவாலய வருடாந்தத் திருவிழாவை முன்னிட்டு இலங்கைப் போக்குவரத்துச் சபை, தனியார் போக்குவரத்து பஸ்கள் மற்றும் படகு சேவைகளானது, மார்ச் 6ஆம் திகதியிலிருந்து ஆரம்பமாகவுள்ளன.

இதற்கமைய, இலங்கைப் போக்குவரத்துச் சபை, தனியார் போக்குவரத்து பஸ் சேவைகளானது, அதிகாலை 5 மணி தொடக்கம் முற்பகல் 10 மணிவரை யாழ்ப்பாணத்தில் இருந்து குறிகட்டுவான் வரை இடம்பெறும்

அத்துடன், படகு சேவையானது, அதிகாலை 6 மணி தொடக்கம் நண்பகல் 12 மணி வரை, குறிகட்டுவானில் இருந்து கச்சதீவு வரை இடம்பெறும்.

குறிகட்டுவானில் இருந்து கச்சதீவுக்கு ஒரு வழிக் கட்டணமாக 325 ரூபாயும் நெடுந்தீவில் இருந்து கச்சதீவுக்கு ஒரு வழிக் கட்டணமாக 250 ரூபாயும் அறவிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .