2025 ஜூலை 21, திங்கட்கிழமை

கஜமுத்தை விற்பனைக்கு கொண்டு வந்தவருக்கு விளக்கமறியல்

Editorial   / 2022 ஜனவரி 24 , பி.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு மாவட்டத்துக்கு கஜமுத்தை விற்பனைக்காகக் கொண்டுவந்த கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த 47 வயது குடும்பஸ்தர் ஒருவர், பெப்ரவரி மாதம் 1ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நபர், சிறப்பு பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் முல்லைத்தீவு நகர் பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டார்.

முல்லைத்தீவு பொலிஸாரிடம் சந்தேகநபர் ஒப்படைக்கப்பட்ட நிலையில், முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில்  முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போது, சந்தேகநபரை, பெப்ரவரி மாதம் 1ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜா உத்தரவிட்டார்.

மேலதிக விசாரணைகளை, முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X