2025 மே 19, திங்கட்கிழமை

‘கடந்த பத்தாண்டுகளாக பஸ்கள் இல்லை’

Editorial   / 2019 நவம்பர் 27 , பி.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரு வைத்தியசாலைகளுக்கு, கடந்த பத்தாண்டுகளாக பஸ்கள் சென்று வருவதில்லை என்பதன் காரணத்தால் வைத்தியசாலைகளுக்குச் செல்லும் நோயாளர்கள் எண்ணூறு மீற்றருக்கு அதிகமான தூரம் நடந்து செல்கின்ற நிலைமை தொடர்கின்றன.

பூநகரியின் முழங்காவில் ஆதார வைத்தியசாலைக்கு ஏ-32 சாலையில் பஸ்களில் இருந்து இறங்கும் நோயாளர்கள் எண்ணூறு மீற்றருக்கு அதிகமான தூரம் நடந்து சென்றே சிகிச்சை பெற வேண்டி உள்ளது.

இதேபோன்று அக்கராயன் பிரதேச வைத்தியசாலைக்கும் நோயாளர்கள் நடந்து செல்ல வேண்டி உள்ளது. கிளிநொச்சி மாவட்டச் செயலாளரிடமும் பூநகரி பிரதேச செயலாளரிடமும் கடந்த பத்தாண்டுகளாக இவை தொடர்பாக முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ள போதிலும் வைத்தியசாலைகளுக்கு பஸ்கள் வருவதில்லை.

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ளூர் போக்குவரத்தில் ஈடுபடுகின்ற பஸ்களையாவது வைத்தியசாலைகளுக்கு வந்து திரும்புவதற்கு நடவடிக்கை எடுக்கும்படி தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்ட போதிலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதன் காரணமாக, பத்தாயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. முழங்காவில் நகரத்தில் வைத்தியசாலை, இரணைமாதாநகர் பாடசாலை, நாச்சிக்குடா பாடசாலை என்பவற்றை உள்ளடக்கி உள்ளூர் பஸ் சேவைகள் நடத்தப்பட வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாகும்.

இக்கோரிக்கைகள் கிளிநொச்சி மாவட்டச் செயலாளரிடம் ஏற்கெனவே எழுத்து மூலமும் நேரடியாகவும் தெரியப்படுத்தப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X