Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 ஜூன் 14 , மு.ப. 11:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
“போரினால் சின்னாபின்னமாகிப்போன எமது மக்களை அழிக்கும் நோக்குடனேயே, கடன் வழங்கும் நிறுவனங்கள் மற்றும் லீசிங் கம்பனிகள் என்பன, எமது பிரதேசத்துக்குள் நுழைந்திருக்கின்றன. அவற்றைக் கட்டுப்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளை, வடக்கு மாகாணசபை முன்னெடுக்க வேண்டும்” என, அம்மாகாண சபையின் உறுப்பினர் சு.பசுபதிபிள்ளை தெரிவித்தார்.
“யுத்தத்தினால், எமது மக்கள் அனைத்தையும் இழந்து வாழ்கின்ற நிலையில், கணக்கற்ற லீசிங் நிறுவனங்கள், வடமாகாணத்துக்குள் தமது நடவடிக்கைகளைப் பரந்தளவில் முன்னெடுத்து வருகின்றன. மக்களுக்கு ஆசை வார்த்தைகளைக் காட்டி, கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றன” என்றும் அவர் கூறினார்.
“கடன்களைப் பெற்றுக்கொண்ட வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களில் பலர், அவற்றை மீளச் செலுத்த முடியாத நிலையில், தங்களது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. இதனால், இவ்வாறான நிதி நிறுவனங்கள் தொடர்பிலான இறுக்கமான கட்டுப்பாடுகளை, வடமாகாண சபை விதிக்க வேண்டும்” என, அவர் மேலும் கூறினார்.
22 minute ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
5 hours ago