Editorial / 2019 செப்டெம்பர் 09 , பி.ப. 12:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
பாதுகாப்புக் கடமையில் இருந்த படையினர் மீது இளைஞர் குழுவொன்று தாக்குதல் மேற்கொண்ட சம்பவமொன்று, முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, மந்துவில் பகுதியில், நேற்று (08) இரவு இடம்பெற்றுள்ளது.
மதுபோதையில் சென்ற இளைஞர் குழுவொன்று, பாதுகாப்புக் கடமையில் இருந்த படையினருடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டு, படையினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தாக்குதலுக்கு இலக்கான படையினர் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து, விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், ஆனந்தபுரத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை, இன்று (09) கைதுசெய்தனர்.
15 minute ago
1 hours ago
20 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
1 hours ago
20 Apr 2026