2025 நவம்பர் 11, செவ்வாய்க்கிழமை

’கடலட்டை பண்ணைகள அமைக்க ஏற்பாடு’

Niroshini   / 2021 ஜூலை 15 , பி.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன்

வடமாகாணத்தில், நுற்றுக்கணக்கான கடலட்டை பண்ணை அமைப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்: வருவதாக, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட இயக்கச்சியில், இயக்கி உணவகத்தை, இன்று(15) திறந்துவைத்தப் பின்னர் உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவி;தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், கௌதாரிமுனை கடல்ட்டை பண்ணையைத் தடுத்து நிறுத்தும் முகமாக தங்களது சுயலாப அரசியலுக்காக சில கருத்துகளை சிலர் சொல்லி வருகின்றனரென்றார்.

'கடந்த ஆட்சியில் இலங்கை - சீனா கூட்டுறவாக அரியாலையில் அனுமதி பெற்று 4, 5 பரப்பில் தனியார் ஒருவருடைய காணியை குத்தகைக்கு பெற்று, கடல் அட்டை இனப்பெருக்க நிலையமொன்று உருவாக்கப்பட்டது.

'அதன் பின்னர், அரியாலை பகுதியில் 10 ஏக்கர் நிலத்தை பெற்று, இனப்பெருக்கம் செய்யப்பட்ட கடலட்டை குஞ்சுகளை  வளர்த்தெடுப்பதற்காக ஒரு நேசரி ஒன்று செய்திருக்கிறார்கள். குறித்த செயற்பாடு சரியாக அமையாத காரணத்தால், கௌதாரிமுனையில் உள்ள கடற்றொழிலாளர் சங்கங்களுடன் இணைந்து ஒரு பரீட்சார்த்தமாக கௌதாரிமுனையில் கடலட்டை பண்ணை அமைத்துள்ளது' எனத் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X