2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

’கடுமையான அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும்’

Editorial   / 2020 பெப்ரவரி 20 , பி.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

நடைபெறவுள்ள மனித உரிமைகள் அமர்வின்போது, இலங்கை அரசாங்கத்துகு கடுமையான அழுத்தங்களை சர்வதேசம் முன்வைக்க வேண்டுமென, வடக்கு – கிழக்கு மாகாணங்களின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளின் சங்கத் தலைவி கலாரஞ்சனி தெரிவித்தார்.

இது குறித்துத் தொடர்ந்துரைத்த அவர்,  காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பில், சர்வதேசத்திடம் அரசாங்கம் பதில் சொல்ல வேண்டுமெனத் தெரிவித்தார்..

ஓ. எம். பி அலுவலகத்தை தாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோமெனத் தெரிவித்த அவர், அந்த அலுவலகத்தில் தமக்கு நம்பிக்கை இல்லையெனவும் கூறினார்.

இலங்கை அரசாங்கத்துக்கு கால அவகாசங்கள் வழங்கப்பட்ட போதிலும், அவர்கள் எதையும் தமக்கு செய்யவில்லையெனத் தெரிவித்த அவர், தமது உறவுகள் தொடர்பில் உண்மை நிலையை அரசாங்கம் வெளிப்படுத்தவில்லையெனவும் சாடினார்.

இந்த நிலையில் மீண்டும் கால அவகாசங்களை வழங்காது, அரசாங்கத்துக்கு கடுமையான அழுத்தங்களை சர்வதேசம் பிரயோகிக்க வேண்டுமெனவும், கலாரஞ்சனி கேட்டுக்கொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .