Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Niroshini / 2021 மே 24 , பி.ப. 02:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு - வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோவிலின் வருடாந்த வைகாசி விசாக பொங்கல் நிகழ்வு, இன்று (24), அனுமதிக்கப்பட்ட நபர்களுடன் நடைபெற்றது.
இதன்போது, கோவிலுக்குச் செல்லும் இரண்டு பிராதன வீதிகளிலும் சோதனை சாவடிகள் அமைத்து, பொலிஸாரும் படையினரும், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டதுடன், பொது சுகாதாரப் பரிசோதகர்களின் கண்காணிப்பின் கீழ் பூஜைகள் நடைபெற்றன.
கண்காணிப்புக்கு கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்தவோ அல்லது Nகுhவிலில்; வழிபாடுகுளை மேற்கொள்ளவோ பொதுமக்கள் எவரும் அனுமதிக்கப்படவில்லை. குறிப்பாக, நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதற்காக வந்த பக்தர்களை, புதுக்குடியிருப்பு - கேப்பாபிலவு வீதியில் உள்ள சோதனை சாவடியில் வைத்து, படையினர் திருப்பி அனுப்பியுள்ளனர்.
அனுமதிக்கப்பட் 51 பேர் மாத்திரம் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அத்துடன், கோவிலை அண்மித்த பகுதிகளில் உள்ள மக்கள் சிலர் வளாகத்துக்குச் செல்ல அனுமதிக்கப்படாத நிலையில், அவர்கள் கோவிலுக்குச் செல்லும் வீதி சந்திகளில், தோங்காய் உடைத்து, தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினர்.
பொலிஸார், பொது சுகாதாரப் பரிசோதகர்களின் கண்காணிப்பின் கீழ் வழிபாடடு பூஜைகள் நடைபெற்றமை குறிப்படத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
49 minute ago
2 hours ago