2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

’கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன’

Editorial   / 2019 மே 24 , பி.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி – கண்டாவளைப் பிரதேச  செயலகத்தின் தாமதம் அடைந்திருந்த புதிய கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக, மாவட்ட செயலகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டாவளைப்பிரதேச செயலகத்துக்கான நிரந்தரக்கட்டடம் இன்றி குறித்த பிரதேச செயலகமானது பல்வேறு இட நெருக்கடிகளுக்கு மத்தியில் இயங்கி வருகின்றது.

குறிப்பாக, திட்டமிடல் செயலகம் புளியம்பொக்கணைச் சந்தியும் ஏனைய நிர்வாகச் செயற்பாடுகள் கண்டாவளைப் பகுதியில் அமைந்துள்ள பிரதேச செயலகக்கட்டத்தில் இயங்கி வருகின்றது.

2010ஆம் ஆண்டு மீள்குடியேற்றத்தின் பின்னர் குறித்த பிரதே செயலகத்தை அமைப்பதற்கான நிதி இரண்டு தடவைகள் கிடைக்கப்பெற்று பிரதேச செயலகத்தின் அமைவிடம் தொடர்பில் ஏற்பட்ட இழுபறி நிலையினால் இதற்கான நிதி திரும்பிச்சென்ற நிலையில், மூன்றாவது தடவையாக நிதி கிடைக்கப்பெற்ற நிதியின் மூலம் கட்டுமானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

புதிய பிரதேச செயலகத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவுற்று கடந்த ஜனவரி மாதம் திறந்துவைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டபோதும், இதன் கட்டமானப்பணிகள் இதுவரை முழுமை பெறவில்லை.

இதன் பணிகள் தாமதம் அடைந்து குறிப்பிட்டகாலம் கட்டுமானப்பணிகள் இடைநிறுத்தப்பட்டன. தற்போது குறித்த பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் மிக விரைவில் இதன் பணிகளை நிறைவுறுத்தி பிரதேச செயலத்தின் புதிய கட்டடத்தில் இயங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .