Niroshini / 2021 செப்டெம்பர் 13 , பி.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்
ஒரே இரவில், பிள்ளையார் சிலை சிதைக்கப்பட்டு, அவ்விடத்தில் அந்தோனியார் சிலை வைக்கப்பட்ட சம்பவமொன்று, மன்னார் - மடு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவம், அப்பகுதியில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இன்று (13) காலை, குறித்த பகுதிக்குச் சென்ற மன்னார் மாவட்டச் செயலாளர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மேல் நழலைமையை நேரடியாக அவதானித்தார்.
அத்துடன், அப்பகுதிக்கு விரைந்த மடு பொலிஸார், குறித்த பகுதியில் வைக்கப்பட்ட அந்தோனியார் சிலையை அகற்றி, பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
அவ்விடத்தில் இருந்த பிள்ளையார் சிலையை மீண்டும் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, குறித்த சம்பவம் தொடர்பாக மடு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக, மாவட்டச் செயலாளர்; தெரிவித்தார்.
மடு - பரப்புக்கடந்தான் வீதியில், மடு தேவாலயத்தில் இருந்து நான்கு கிலோமீற்றர் தூரத்தில், பிள்ளையார் சிலை ஒன்று, ஞாயிற்றுக்கிழமை (12) மாயமாகியுள்ளதுடன், அதே தினத்தில் குறித்த இடத்தில் அந்தோனியார் சிலை வைக்கப்பட்டுள்ளது.
அப்பகுதி காட்டுப்பகுதி என்பதால், மரம் ஒன்றுக்கு அடியில் கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக இருந்த பிள்ளையார் சிலையை, மதங்கள் கடந்து அப்பகுதியால் செல்பவர்கள் வணங்கி விட்டு செல்வது வழக்கம் என்று, அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர், அப்பகுதியில் சிறிய கோவில் ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, அதன் முதல் கட்டமாக, மூலஸ்தானம் அமைக்கப்பட்டு, அதற்கு தற்காலிகமாக பிள்ளையார் சிலை வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த பகுதியில் உள்ள பிள்ளையார் சிலையை சில விசமிகள் அகற்றிவிட்டு, அந்தோனியார் சிலையை வைத்துள்ளனர்.

30 minute ago
36 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
36 minute ago
45 minute ago