2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

கண்காட்சி

Editorial   / 2019 பெப்ரவரி 05 , பி.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி – கண்டாவளை,  கோரக்கன்கட்டு பகுதியில், கிராம அபிவிருத்தி  திணைக்களத்தின் அனுசரணையுடன், கண்டாவளை பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி நிலையத்தால், நடத்தப்பட்ட ஆடை வடிவமைத்தல் கண்காட்சி நிகழ்வு, கோரக்கன் கட்டு பொதுநோக்கு மண்டபத்தில், இன்று (05) நடைபெற்றது.

கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக கண்டாவளை பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் மனோகரன் பிரதீப், சிறப்பு விருந்தினராக மாவட்ட கிராம முன்னாள் உத்தியோகத்தர் திருமதி சுமித்ரா சுதாகர் ஆகியோர் கலந்துகொண்டனர் 

இதன்போது, மேற்படி பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசில்களும் அவர்களுக்கான வாழ்வாதாரத்தை  முன்னெடுப்பதற்கான கொடுப்பனவுகளும் வழங்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .