2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

’கண்ணி வெடிகளை அகற்றுவதில் சவால்’

Editorial   / 2019 மார்ச் 20 , பி.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி – முகமாலைப் பகுதியில், யுத்தக் காலத்தில் புதைக்கப்பட்ட நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவதில், பாரிய சவால் காணப்படுவதாக, கண்ணிவெடி அகற்றும் நிறுவனப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில், தொடர்ந்துக் கருத்துரைத்த அவர்கள், இப்பகுதிகளில், இன்னமும் வெடிபொருள்கள் அகற்றப்படாத, மிகவும் ஆபத்தான பகுதிகளில் கைவிடப்பட்ட காவலரண்களில் இருந்து, மரக்குற்றிகளையும் இரும்புகளையும் பலர் எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கண்ணவெடி அகற்றும் பணிகள் முன்னெடுக்கும் பகுதிகளில், வெடிபொருள் ஆபத்துகளுக்கு இடும் பதாதைகளையும் குறியீடுகளையும் சிலர்ம் சேதப்படுத்தும் அதேவேளை, அவற்றை எடுத்தும் செல்வதாக, அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இவ்வாறான செயற்பாட்டால், மறுநாள் பணிகளை முன்னெடுப்பதற்கு முன்னர், அதனைச் சீர்செய்வதற்கு பணியாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும், அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

இதேவேளை, வெடிபொருள் அகற்றப்பட்டு விடுவிக்கப்பட்ட பகுதிகள் தவிர்ந்த ஏனைய ஆபத்தான பகுதிகளுக்கு, பொலிஸ் பாதுகாப்பு வழங்க வேண்டுமென, பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .