Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
சுப்பிரமணியம் பாஸ்கரன் / 2017 மே 22 , பி.ப. 05:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜப்பானிய தூதரக அதிகாரிகள், கிளிநொச்சி முகமாலை பகுதிக்குச்சென்று கண்ணிவெடி அகற்றும் பணிகளைப் பார்வையிட்டதுடன், கண்ணிவெடி அகற்றும் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினர்.
இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜப்பானிய தூதரக அதிகாரி மிசாகோ தகஜம் மற்றும் இலங்கைத் தூதகத்தைச் சேர்ந்த நிரோசா வெல்கம ஆகியோர், இன்று (22) பிற்பகல் முகமாலைப்பகுதிக்குச் சென்று கண்ணிவெடி அகற்றும் நிறுவவனப்பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியதுடன் கண்ணிவெடி அகற்றும் பணிகளையும் பார்வையிட்டுள்ளார்.
அந்தப் பகுதியில் வெடிபொருட்கள் மிக ஆபத்தான நிலையில் காணப்படுவதாகவும் இந்தப்பகுதியில் மீள்குடியேற்றத்திற்குப்பின்னர் வெடிபொருட்களில் உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளதாகவும் கண்ணிவெடி அகற்றும் நிறுவனப்பிரதிநிதிகள் தெரிவித்திருந்தனர்.
கிளிநொச்சி மாவட்டத்தின் அதிக யுத்தம் இடம்பெற்ற இடமாகவும் வெடிபொருட்கள் அதிகளவிலேயே காணப்படுகின்ற பகுதியான கிளாலி தொடக்கம் நாகர் கோவில் வரைக்குமான பகுதிகளில் சர்வதேச நிதியுதவியுடன் கண்ணவெடி அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், முகமாலைப் பகுதியில் ஜப்பான் நிதிப்பங்களிப்புடன் டாஸ் நிறுவனத்தினால் கண்ணிவெடி அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago