2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

கண்ணிவெடி அகற்றுவதற்கு நிதி கோரி மரதன் ஓட்டம்

Editorial   / 2019 பெப்ரவரி 02 , பி.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்செல்வன் 

மனித நேய கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுப்பட்டு வரும் நிறுவனங்களில் ஒன்றான ஹலோ ட்ரஸ்ட் நிறுவனதின் பணியாளர்கள்,  கண்ணி வெடி அகற்றும் செயற்பாட்டுக்கு நிதி கோரும் விழிப்புணர்வு  மரதன் ஓட்டம் ஒன்றை இன்று  மேற்கொண்டிருந்தனர்

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது  கண்ணி வெடி அகற்றும்   பணிகள்  இடம்பெற்று வரும் பிரதேசமான முகமாலையில் ஆரம்பமான இந்த விழிப்புணர்வு ஓட்டம், கிளிநொச்சியில் அமைந்துள்ள ஹலோ ட்ரஸ்ட் நிறுவன அலுவலகத்தில் நிறைவுற்றது.

இதில் கண்ணி வெடி  அகற்றும்  பெண்கள், ஆண்கள் என பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .