2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

கத்திக்குத்தில் இளைஞன் பலி

Niroshini   / 2021 மே 19 , பி.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன் செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட  சுதந்திரபுரம் பகுதியில், கத்திக்குத்துக்கு இலக்கான 25 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சுதந்திரபுரம் - கொலனி பகுதியைச் சேந்த 25 வயதுடைய குணராசா நிதர்சன்   என்பவரே, இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்,

குறித்த இளைஞன், திங்கட்கிழமை (17) இரவு கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில், புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

சுதந்திரபுரம் - கொலனி பகுதியில், சட்டவிரோத மதுபான வியாபாரம் மற்றும் அதன் பாவனையால் இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கத்திக்குத்தாக மாறியுள்ளதாக, விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவரும் புதுக்குடியிருப்பு பொலிஸார், கத்திக்குத்தை மேற்கொண்ட நபர் தலைமறைவாகியுள்ளதாகவும் அவரை கைது செய்யவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிதத்னர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .