2025 மே 13, செவ்வாய்க்கிழமை

’கனகராயன்குளம் வைத்தியசாலையில் ஆளணி பற்றாக்குறை’

Niroshini   / 2021 ஜூன் 07 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா - கனகராயன்குளம் வைத்தியசாலையில், ஆளணி பற்றாக்குறை நிலவுவதாக, வவுனியா வடக்கு  பிரதேச சபை தவிசாளர் எஸ். தணிகாசலம் தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், கனகராயன்குளத்தில் வாழும் மக்களின் நலன்கருதி கிராமிய வைத்தியசாலையொன்றை அமைக்குமாறு பல்வேறு தரப்பினர் விடுக்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரம், குறித்த வைத்தியசாலை நிர்மாணிக்கப்பட்டதாகவும் இருந்தபோதிலும், அதனை திறப்பதில் காலதாமதமாகி, பின்னர் அண்மையில் திறந்து வைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இந்த வைத்தியசாலைக்கு வைத்தியர் ஒருவருடன் உதவியாளர் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், இருந்தபோதிலும், குறித்த வைத்தியசாலைக்கு அதிகளவான நோயாளர்கள் வருகின்றமையால் வைத்தியசாலையை இயக்குவதற்கு மேலதிக ஆளணி தேவையாக உள்ளதென்றும் கூறினார்.


இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பிடம் முறையிட்டும், இதுவரை எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை எனவும், தவிசாளர் சாடினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X