2025 மே 19, திங்கட்கிழமை

கனகாம்பிகைக்குளம் வான்பாய ஆரம்பம்; மக்களைப் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தல்

Editorial   / 2019 டிசெம்பர் 03 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

 

கிளிநொச்சி – கனகாம்பிகைக்குளம் வான்பாயத் தொடங்கி இருப்பதன் காரணமாக, தாழ்நிலப் பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு, கிளிநொச்சி மாவட்ட நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

கனகாம்பிகைக்குளம் வான்பாய்ந்து, ஆறு வழியாகச் செல்லும் நீர், கிளிநொச்சி குளத்தை நிரப்பி, 05 அடி வான் வழியாக பரந்தனை நோக்கி வெள்ளம் பாயும்.

இதனால், பரந்தன் பகுதியிலேயே கூடுதலான பாதிப்புகளை ஏற்படுத்தும்.

இந்நிலையில், கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தின் இடர் முகாமைத்துவப் பிரிவு, முப்படையினர் தாழ்நிலப் பகுதிகளில் வாழ்கின்ற மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X