Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2019 ஓகஸ்ட் 14 , பி.ப. 05:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி – முரசுமோட்டை, மருதங்குளம் பகுதியில் வயல் காணிக்குள் அத்துமீறி நுழைந்து காணி உரிமையாளர் உட்பட நான்கு பேரையும், தாக்கிய அப்பகுதி கமக்கார அமைப்பின் தலைவர் உட்பட ஆறு பேரும் தலா ஒரு இலட்சம் ரூபாய் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி - கண்டாவளைப் பிரதேசத்துக்குட்பட்ட மருதங்குளம் பகுதியில் 3.17 ஏக்கர் காணியும் அதன் கீழான ஒதுக்கீட்டுக் காணி உள்ளடங்கலாக 3.75 ஏக்கர் வயல் காணியில் அதன் உரிமையாளர் இம்முறை சிறுபோக பயிர்ச்செய்கை மேற்கொண்டதுடன், கடந்த வெள்ளிக்கிழமை (09) அதனை அறுவடை செய்து கொண்டிருந்த சமயம் காணிக்குள் அத்துமீறி நுழைந்த கமக்கார அமைப்பின் தலைவர் அயல் கமக்கார அமைப்பின் பொருளாளர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் குறித்த காணி உரிமையாளரையும் அவரது மகன் மற்றும் உறவினர்களை கடுமையாகத் தாக்கி காயப்படுத்தியுள்ளனர்.
அத்துடன், காயமடைந்தவர்களைக் கொண்டு செல்வதற்காக, சம்பவ இடத்துக்கு வந்த அவசர நோயாளர் காவுவண்டியில் மயக்கமுற்ற நிலையில் இருந்த அவரது மகனை ஏற்றிச்செல்லவிடாது தடுத்திருந்தனர்.
இந்நிலையில், சம்பவ இடத்துக்கு பொலிஸார் வருகைதந்த பின்னரே காயமடைந்தவர்கள், கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
குறித்த சம்பவம் தொடரபில் விசாரணைகளை முன்னெடுத்த கிளிநொச்சி பொலிஸார், இச்சம்பவத்துடன் தொடர்புபட்ட கமக்கார அமைப்பின் தலைவர் உள்ளிட்ட ஆறு பேரைக் கைது செய்து, நேற்று (13) கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றின் பதில் நீதவான் எஸ்.சிவபாலசுப்பிரமணியன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
இதன்போது, குறித்த அப்பகுதி கமக்கார அமைப்பின் தலைவர் உட்பட ஆறு பேரையும் தலா ஒரு இலட்சம் ரூபாய் பிணையில் செல்ல அனுமதித்ததுள்ளதுடன், ஓகஸ்ட் 19ஆம் வழக்கு தவணையிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இச்சம்பவத்துடன் தொடர்புபட்ட ஏனைய சந்தேகநபர்களை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
51 minute ago
52 minute ago