Niroshini / 2020 ஒக்டோபர் 18 , பி.ப. 02:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு மாவட்டத்தில், நீண்டகாலமாக மாற்றம் செய்யப்படாமல் இருக்கின்ற கமக்கார அமைப்புகள் பல பத்து ஆண்டுகளாக தொடர்ச்சியாக இயங்கிவருகின்றன எனத் தெரிவித்த அப்பகுதி விவசாயிகள், இவற்றை மாற்றம் செய்து பதிய நிர்வாக தெரிவுகள் மேற்கொள்ளப்படவேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் இயங்கிவரும் நூற்றுக்க மேற்பட்ட கமக்கார அமைப்புகள் புதிய நிர்வாகங்கள் தெரிவு செய்யப்படாமல் தொடர்ச்சியக பல ஆண்டுகள் இயங்கி வருவதால், சரியான கணக்கறிக்கை வெளிப்படுத்தல் இல்லாத நிலை காணப்படுவதாகவும் இவ்வாறு தொடர்சியான ஒரே நிர்வாகத்தின் கீழ் இயக்கப்படுவதால் பல விவசாயிகளுக்கு அரசால் வழங்கப்படும் மனிய உதவிகள் கிடைப்பதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும், விவசாயிகள் தெரிவித்தனர்.
கமக்கார அமைப்புகள் ஊடாக பல குளங்கள் மீன்பிடி குத்தகைக்காக விடப்பட்டுள்ளன. பல அரச காணிகளில் விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வீதி சீர்செய்தல் ,குளம் சீர்செய்தல், வாய்க்கால் கட்டுதல், நெல்காயப்படுத்தல் மேடை கட்டுதல் உள்ளிட்ட பல அபிவிருத்தி பணிகளுக்கான ஒப்பந்தங்கள் கொடுக்கப்பட்ட போதும், அதற்கான கணக்கு அறிக்கைகள் சரியாக வெளிப்படைத்தன்மை இல்லாத நிலை காணப்படுகின்றது.
இது குறித்து கமநல அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு தெரியப்படுத்தியும் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, கமக்கார அமைப்புகளின் வெளிப்படை தன்மை இல்லாத காரணத்தால், அமைப்புகளின் கணக்குகள் கணக்காய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்றும் புதிய நிர்வாக தெரிவு செய்யப்படவேண்டும் என்றும், அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
32 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
2 hours ago
4 hours ago