Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
George / 2016 நவம்பர் 01 , மு.ப. 04:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
முல்லைத்தீவு, கரைதுரைப்பற்று பிரதேசத்தில், பிரதான வீதிகள் மற்றும் குடியிருப்பு வீதிகள் புனரமைக்கப்படாமல் இருப்பதால், அப்பகுதியிலுள்ள மக்கள், தமது அன்றாட போக்குவரத்து நடவடிக்கையில், பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
கரைதுரைப்பற்றுப் பிரதேசத்திலுள்ள “ஏ” மற்றும் “பி” தரத்திலான 90.25 கிலோமீற்றர் வீதிகளில், 89.38 கிலோமீற்றர் வரையான வீதிகள் புனரமைக்கப்பட்டுள்ளன.
இவை தவிர, அமைப்பில் தூண்டாய் வீதி, முள்ளியவளை காட்டு விநாயகர் வீதி, முள்ளியவளை வற்றாப்பளை வீதி, வண்ணாங்குளம் வீதி, வற்றாப்பளை கோவில் வீதி, முல்லைத்தீவு வைத்தியசாலை வீதி, தண்ணீமுறிப்பு குமுழமுனை வீதி, அளம்பில் கடற்கரை வீதி, சிலாவத்தை தச்சன் வேலி வீதி ஆகிய 99.41 கிலோமீற்றர் நீளமான “சி” தர வீதிகளில், 8.83 கிலோமீற்றர் வரையான வீதிகளே புனரமைக்கப்பட்டுள்ளன. ஏனைய 90.58 கிலோமீற்றர் வரையான வீதிகள் இதுவரை புனரமைக்கப்படாத நிலையில் காணப்படுகின்றன.
இதேவேளை, கரைதுரைப்பற்றுப் பிரதேச சபைக்கு சொந்தமான வீதிகள், இதுவரை புனரமைக்கப்படாத நிலையில் காணப்படுவதுடன், சில வீதிகள் அழிவடைந்தும் காணப்படுகின்றன.
முல்லைத்தீவு உப அலுவலகத்தின் கீழ் 39.15 கிலோமீற்றர் வீதிகளும் முள்ளியவளை உப அலுவலகத்தின் கீழ் 66.80 கிலோமீற்றர் வீதிகளும் செம்மலை உப அலுவலகத்தின் கீழ் 55 கிலோமீற்றர் வீதிகளும் முள்ளிவாய்க்கால் உப அலுவலகத்தின் கீழ் 121.55 கிலோமீற்றர் வீதிகளும் புனரமைக்கப்படாத நிலையில் காணப்படுகின்றன.
பிரதேச சபைக்குச் சொந்தமான 307.6 கிலோமீற்றர் வீதிகளில் 25.1 கிலோமீற்றர் நீளமான வீதிகள் மாத்திரமே இதுவரை புனரமைக்கப்பட்டுள்ளன. ஏனைய 282.58 கிலோமீற்றர் நீளமான வீதிகள் இதுவரை புனரமைக்கப்படாத நிலையிலேயே காணப்படுகின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
6 hours ago
6 hours ago