2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

கரைத்துறைப்பற்றில் 809 மலசல கூடங்கள் தேவை

Princiya Dixci   / 2016 நவம்பர் 01 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-    சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு, கரைதுரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 809 குடும்பங்களுக்குப் புதிய மலசலகூட வசதிகள் செய்துக் கொடுக்க  வேண்டியுள்ளதாகக் கரைதுரைப்பற்று பிரதேச செயலாளர் எஸ்.குணபாலன் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கூறுகையில்,

கரைதுரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள பகுதிகளில் இதுவரை, 13 ஆயிரத்து 213 குடும்பங்கள் மீள்குடியேறியுள்ளன. இவர்களில், 516 குடும்பங்களுக்கு மலசலகூடங்கள் அமைத்துக் nhகடுக்கப்பட்டுள்ளன. மேலும், 345 மலசலகூடங்கள் புனரமைத்தும் கொடுக்கப்பட்டுள்ளன.

இவை தவிர, 809 புதிய மலசலகூடங்களை அமைத்துக் கொடுக்க வேண்டிய தேவையுள்ளதுடன், சேதமடைந்த நிலையில் காணப்படும் 77 மலசலகூடங்களையும் புனரமைத்துக் கொடுக்க வேண்டியுள்ளது என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .