2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

கரிப்பட்டமுறிப்பு கிராமத்துக்கு பஸ் சேவை இடைநிறுத்தம்

Gavitha   / 2016 நவம்பர் 22 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் கரிப்பட்டமுறிப்பு, புதிய நகருக்கான இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் சேவை இடைநிறுத்தப்பட்டிருப்பதன் காரணமாக, இக்கிராமத்து மக்கள் போக்குவரத்து நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளனர்.

கரிபட்டமுறிப்பிலிருந்து 3 கிலோமீற்றர் தூரத்திலுள்ள புதிய நகர் கிராமத்துக்கு காலை 7 மணிக்கும் முற்பகல் 11 மணிக்கும் இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் சேவை இடம்பெற்றது.

தற்போது காலை 7 மணிக்கு இக்கிராமத்துக்கான பஸ் சேவை நிறுத்தப்பட்டுள்ளதன் காரணமாக, கரிப்பட்டமுறிப்புப் பாடசாலை, மாங்குளம் மகா வித்தியாலயம் என்பவற்றிற்குச் செல்லும் மாணவர்கள் நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளனர்.

கரிப்பட்டமுறிப்பிலிருந்து இக்கிராமத்துக்கான 3 கிலோமீற்றர் வீதி, புனரமைக்கப்படாததன் காரணமாகவே, பஸ் சேவைகள் இடம்பெறவில்லை எனவும், இது தொடர்பாக இறுதியாக நடைபெற்ற ஒட்டுசுட்டான் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் தெரிவிக்கப்பட்டும் அதிகாரிகளினாலும் அரசியல்வாதிகளினாலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் கிராம மக்களினால் கவலைத் தெரிவிக்கப்படுகின்றது.

பின்தங்கிய கிராமங்களை அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் கவனத்திற்கொள்வதில்லை எனவும் தேர்தல் காலத்தில் பஸ்களை அனுப்பும் அரசியல்வாதிகள் பின்பு தங்களுடைய கிராமங்களை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை எனவும் தற்போது மழை காலம் என்பதினால் போக்குவரத்து வசதி இல்லாத தமது கிராமத்தினைச் சேர்ந்த 74 குடும்பங்கள் போக்குவரத்து நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளதாகவும் இக்கிராம மக்களினால் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .