Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Editorial / 2020 பெப்ரவரி 21 , பி.ப. 01:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
“தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடாக கருணாம்மாணை வேட்பாளராக போட்டியிட சந்தர்ப்பத்தை கோரியுள்ளோம். எனினும் அதற்காக கூட்டமைப்பு இறங்கி வர தயாராக இல்லை” என, தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் செயலாளர் வ.கமலதாஸ் தெரிவித்தார்.
வவுனியாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர், தமிழருக்கு செயற்றிறன் மிக்க தலைவர்கள் வேண்டுமெனவும் விக்னேஸ்வரன் நீதியரசராக இருந்த காலத்தில் வழங்கிய தீர்ப்புக்களும் தண்டணைகளும் எங்களுடைய தமிழ் மக்களுடைய நிலபுலங்கள் பறிபோவதற்கான முன்னுதாரணமாகவே அமைந்திருந்தனவெனவும் சாடினார்.
சட்டக்கோவையைப் படித்தவர்களுக்கு இது நன்கு தெரியுமெனத் தெரிவித்த அவர், அரச காணி என்ற பேரில் தமிழ் மக்களின் பாரம்பரிய காணிகளும் பூர்வீக காணிகளும் அபகரிக்கப்பட்டிருக்கின்றனவெனவும் கூறினார்.
“வேடுவ மக்களுடைய வெம்பு பூமி என்று சொல்லக்கூடிய அவர்களின் வாழ்வாதார நிலங்களும் அழிக்கப்பட்டிருக்கின்றன. காணி அபகரிப்பு சட்டத்தின் கீழ் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியால் கைப்பற்றப்பட்ட காணிகள் இன்று வரை தமிழ் மக்களுக்கோ, சிறுபான்மை மக்களுக்கோ வழங்கப்படாமல் கபடத்தனமாக மண் வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றது” எனவும் அவர் தெரிவித்தார்.
“இன்று பலர் நீதியரசர் என்றும் சட்டத்தரணிகள் என்றும் வந்தாலும் கூட அவர்கள் இந்த காணி அபகரிப்புக்கு எதிராக குரல் கொடுத்ததும் இல்லை அதனை முறியடித்ததும் இல்லை.
“அவ்வாறானவர்களின் அரசியல் போராட்டம் ஜனநாயக ரீதியாக மக்களுடைய அங்கிகாரத்தை ஏமாற்றி பெற்றமையேயாகும். இவர்கள் இதுவரை எந்த சாதனையைதான் செய்திருக்கிறார்கள்.
“எந்தச் சட்டத்தைதான் உடைத்திருக்கிறார்கள் அதனை நிரூபித்தி காட்டட்டும் பார்ப்போம். இவ்வாறானவர்களை மீண்டும் மீண்டும் வாக்களித்து தெரிவு செய்வதற்கு நாங்கள் கொத்தடிமைகள் அல்ல. அவர்கள் சரியான ஒரு தலைமையை முன்வைப்பார்களேயானால் விக்னேஸ்வரன் அல்ல செயற்றிறன் உள்ள தலைமையை முன்வைத்தால் எமது கட்சி ஆதரவளிக்கதான் போகிறோம்” எனவும் அவர் கூறினார்.
“உறுதியானதும் பற்றுறுதியும் நேர்மையுமான செயற்திறன் உள்ள ஒருவரை வேட்பாளராக நியமியுங்கள் என தமிழரசுக் கட்சியிடம் நான் கூறியிருந்தேன். அது மாத்திரமின்றி எங்களுடைய கட்சியின் தலைவர் கருணாம்மானுக்கு மாத்திரம் கிழக்கு மாணாகத்தில் கூட்டமைப்பில் சந்தர்ப்பம் தாருங்கள் எனவும் கேட்டிருந்தோம்
“அவ்வாறு அவருக்கு சந்தர்ப்பம் தந்தால் பின்புலமாக இருந்து நாமும் செயற்பட்டு 22 அல்ல 25 பாராளுமன்ற உறுப்பினர்களை வடக்கு கிழக்குஇ மலையகம்இ கொழும்பு உட்பட்ட பகுதிகளில் பெறுவதற்கு முயற்சிப்போம் என கூறினோம்.
“ஆனால் அந்த தலைக்கனமிக்க பிரபுத்துவ சிந்தனை கொண்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பை வழி நடத்திக்கொண்டிக்கிறவர்கள் இன்று வரை இறங்கி வந்ததாக இல்லை. ஆனாலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குள் உள்ள மற்ற கட்சிகளின் தலைவர்கள் இன்றும் எம்முடன் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள்” என அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
6 hours ago